டிட்லி புயலால் உயிரிழப்பு 57-ஆக அதிகரிப்பு.. 131 வீடுகள் நாசம்.. பரிதவிக்கும் மாநிலம்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Oct 19, 2018 03:56 PM

வங்கக்கடலில் அண்மையில் உருவான டிட்லி புயலால், ஒடிசா மாநிலத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து அங்கு இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது. என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும் புயலை சமாளிகக் முடியாமல் கடுமையாக தவிக்கிறது அம்மாநிலம்.
மேலும் சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 131 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி சிதைந்துள்ளன என்று அம்மாநில சிறப்பு மீட்புப்படை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
Tags : #TITLICYCLONE #ODISHA #INDIA #NATIONALDISASTER
