காமெடியனாக இருந்து ஹீரோவாக புரோமோஷன் பெற்ற நடிகர் சந்தானம் தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வருகிறார். அடுத்ததாக இவர் நடிப்பில் 'சர்வர் சுந்தரம்', 'ஓடி ஓடி உழைக்கணும்', 'மன்னவன் வந்தானடி' ஆகிய படங்கள் வளர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் நடிகர் சந்தானம் தனி ஹீரோவாக மட்டும் நடிக்காமல் மற்ற ஹீரோக்களுடனும் சேர்ந்து நடிக்க வேண்டும் என, நடிகர் ஜீவா - சந்தானத்துக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.
ஜீவாவுடன் சேர்ந்து நடித்த 'சிவா மனசுல சக்தி' திரைப்படம், தமிழ் சினிமாவில் சந்தானத்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
BY MANJULA | FEB 10, 2018 3:43 PM #JIIVA #SANTHANAM #ஜீவா #சந்தானம் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories