'டிசம்பர் மாதம் மழை எப்படி இருக்கும்'...தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!
Home > News Shots > தமிழ்By Jeno | Nov 29, 2018 11:22 AM
இன்றும், நாளையும் மழை பெய்ய கூடிய இடங்களை தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார்.இதுக்குறித்து தனது முகநூல் பக்கத்தில் முக்கியப் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
டெல்டா, உட்பகுதிகள், மேற்கு மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புள்ளது. இப்பகுதிகளில் ஏன் மழைப்பொழிவு ஏற்படுகிறது என்பது செயற்கைக்கோள் படம் மூலம் அறிந்து கொள்ளலாம். உட்பகுதிகளில் ஈரப்பதமான சூழலை உண்டாக்கும் நிகழ்வால் மழை பெய்யும். தற்போது டெல்டா (நாகை, திருவாரூர், தஞ்சாவூர்) கடலூர், அரியலூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது.
இன்று மாலை மேற்கு உட்பகுதிகளான விருதுநகர், திருநெல்வேலி, திருப்போரூர், திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தேனி, நீலகிரி, மதுரை, சிவகங்கை ஆகிய பகுதிகளில் மழை பெய்யும்.
டெல்டா பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. நாளை மழை அளவு குறைந்தாலும், தொடர்ந்து பெய்யக்கூடும். நாளை டெல்டா(நாகை, திருவாரூர், தஞ்சாவூர்), தென் தமிழகம், நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தமிழக உட்பகுதிகளில் மழை பெய்யும்.
மேலும் டிசம்பர் 1ம் தேதி முதல் மழை படிப்படியாக குறையும்.இந்த மாத இறுதியில் புயல் இருக்கும் என சிலர் தகவல் வெளியிட்டு இருக்கிறார்கள்.ஆனால் அது குறைந்த காற்றழுத்தம் கூட கிடையாது.மக்களும் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.டிசம்பர் மாதத்தில் மழை இருந்தாலும் அது சாதாரணமாகவே இருக்கும்,எனவே மக்கள் பயப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார்.