கடவுளின் தேசம் காப்பாற்றப்பட்டது.. கேரளாவுக்கு தமிழ்நாடு வெதர்மேனின் ரிப்போர்ட்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Aug 19, 2018 06:20 PM
இப்போதெல்லாம் வெதர் ரிப்போர்ட்டை விட வெதர் மேனின் ரிப்போர்ட்டையே பலரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு வெள்ளம், மழை பற்றிய துல்லியமாக கணித்துச் சொல்லும் தமிழ்நாட்டு வெதர் மேன் பிரதீப் ஜான் அடுத்து கேரளாவின் தற்போதைய, அடுத்த நிலை பற்றிய முக்கிய தகவலை தனது சமூக வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ‘கேரளாவின் நிலை மாறி வருகிறது. அடுத்த வாரம் கேரள வானத்தில் மேக மூட்டம் காணப்படவில்லை. இந்த அறிவிப்பைக் கூற காத்திருந்தேன். பருவமழையை மட்டும் சில இடங்களில் நாளையும் அதன் மறுநாளும் காணலாம். வதந்திகளை நம்பாதீர்கள். ரேடார் புகைப்படங்களைப் பார்த்தால் ஆபத்திலிருந்து கேரளா முழுவதுமாக தப்பியுள்ளதை காணலாம்.
அடுத்து வரவிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை பற்றிய அறிவிப்புகளால் அச்சம் கொள்ள வேண்டாம். அது ஒரிஸ்ஸா மாநிலத்தில் அருகில் உருவாகியுள்ளது உண்மைதான். ஆனால் இது ஆபத்தான பருவக்காற்றினை உருவாக்காது. இதனால் பாதிப்பும் ஏற்படாது. வதந்திகளை தயவுகூர்ந்து நம்பாதீர்கள். ஆக துயரிலிருந்து தப்பிய கேரளா 1961, 1924,1882 ஆம் ஆண்டுகளுக்கு பின், 2019ல் உண்டான மிகவும் மோசமான பருவ மழையிலிருந்து ஓரிரு நாட்களில் மீண்டு, மீண்டும் உருப்பெறவிருக்கிறது’ என்று அறிவித்துள்ளார். இதனை பலரும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.