2 மாதத்தில் பிளாஸ்டிக் தடை: தண்ணீர் கேன் கிடைப்பதில் சிக்கலா?
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Oct 15, 2018 02:49 PM
தமிழகத்தில் வரும் ஜனவரி 1ம் தேதி, 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இரண்டு நாட்கள் ஆங்காங்கே பிளாஸ்டிக் பொருட்களை பெரும் மூலதனமாக வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
அதுமட்டுமில்லாமல், சிலர் அமைதிப் போராட்டங்களைக் கூட செய்தனர். ஒருவழியாக உள்ளூர் கவுன்சில்களுக்குள் பேசி முடிவெடுத்ததில், 45 நாட்கள் தற்போது இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை விற்றுக்கொள்ள கால அவகாசம் நீட்டிக்கொள்ள உத்தரவு வாங்கப்பட்டுள்ளது.
எனினும் தண்ணீர் கேன் போன்ற அதி-அத்தியாவசிய தேவைகளுக்காக இருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் இருக்கும் எனவும், மறு சுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக்குகளால் சுற்றுச் சூழலுக்கு கேடு என்பதால் அவை மட்டுமே தடை செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Tags : #PLASTICWATERCAN #BANPLASTICS #TAMILNADU #ECOFRIENDLY