போராட்டத்திற்கு வெற்றி: தூத்துக்குடி 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு சீல் வைப்பு!
Home > News Shots > தமிழ்By Manjula | May 28, 2018 06:17 PM
இன்று காலை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தூத்துக்குடி அரசு மருத்துமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து, இன்று பிற்பகல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் உயரதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு இன்று மாலை அரசாணை வெளியிட்டது.பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக, இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சற்றுமுன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஸ்டெர்லைட் ஆலையைப் பூட்டி சீல் வைத்தார். இதன் மூலம் தூத்துக்குடி மக்களின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு 'இவர்கள்' தான் காரணம்.. எப்.ஐ.ஆரில் தகவல்!
- Thoothukudi police firing: Deputy CM visits injured in hospital
- Internet to be restored in Thoothukudi
- CCTV footage of Thoothukudi shooting released
- Stalin demands murder case against policemen who opened fire in Thoothukudi