பிரதமரை சந்தித்த முதல்வர் கஜா புயல் பற்றி என்ன பேசினார்?
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Nov 22, 2018 08:49 PM
பிரதமர் மோடியிடம் புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ள, புயல் நிவாரண நிதிக்கு முதற்கட்டமாக ரூ.1500 கோடி வழங்க கோரிக்கை வைத்துள்ளதாக, கஜா புயல் சேத மதிப்பீடுகளை கணக்கிட்டு, பிரதமரிடம் அறிக்கை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சேத பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த மத்திய குழுவை விரைந்து அனுப்புவதாக பிரதமர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்த முதல்வர், கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த புயலுக்கு இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மோடியிடம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் கஜா புயல் நிவாரண பணிகளில் அரசு ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றி வருவதாகவும், குறிப்பாக மின்சார ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரிவதாகவும் கூறியுள்ளார்.