கஜா புயல் பாதித்த பகுதிகளை இன்று பார்வையிடும் தமிழக முதல்வர்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Nov 20, 2018 07:15 AM
கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. மேலும் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகையில் புயல் சேத பகுதிகளை பார்வையிடுகிறார்.
தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கும், மீனவர்கள் குடும்பத்துக்கும் உடனடியாக 5000 ரூபாய் வழங்க உத்தரவிட்டு நிதி ஒதுக்கியுள்ள முதலமைச்சர், பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒட்டுமொத்த நிதியாக 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
முன்னதாக தமிழகத்தின் நாகை, கடலூர், திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களை கடந்த 16-ம் தேதி கஜா புயல் கடுமையாக தாக்கியதை அடுத்து ஏறக்குறைய 1.7 லட்சம் மரங்கள், 45 பேர் உயிரிழப்பு என இயற்கையும் மனிதர்களும் கஜா புயலால் சூறையாடப்பட்ட துயரங்கள் ஏராளம்.
இதில் எஞ்சியவர்களை முகாம்களிலும், காயம் பட்டவர்களுக்கு நிவாரணங்களும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சமும் அறிவித்திருந்த நிலையில் கஜா புயலால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்றைய தினம் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொள்கிறார்.