'டைட்டானிக்',இந்த கப்பலின் பெயரை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. தற்போது அதே பழைய உருவத்தை போன்றே உருவாக்கப்பட்டு பயணிக்க தயாராகி வருகிறது டைட்டானிக்-2 .
இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் இருந்து நியூயார்க் நகருக்கு கடந்த 1915-ம் ஆண்டு, ஏப்ரல் 10-ம் தேதி டைட்டானிக் கப்பல் புறப்பட்டது. ஆனால், கப்பல் புறப்பட்ட 5 நாட்களில் ஏப்ரல் 15-ம் தேதி அட்லாண்டிக் கடற்பகுதியில் பயணித்தபோது, எதிர்பாராதவிதமாக பனிமலையில் மோதி கப்பல் மூழ்கியது. இந்தக் கப்பலில் பயணித்த 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளில் 1500 பேர் இறந்துவிட்டாகக் கூறப்படுகிறது.கடல் பகுதியில் நிகழ்ந்த விபத்துகளிலே இந்த விபத்து தான் மிகவும் கோரமான ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது.
இந்த கப்பலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம் டைட்டானிக் உலக அளவில் வசூலை வாரிக் குவித்தது.இன்று அது திரையிடப்பட்டாலும் அதை காண்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.இந்நிலையில் கடலில் மூழ்கிய டைட்டானிக்-1 கப்பலைக் போன்று டைட்டானிக்-2 கப்பல் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கப்பல் டைட்டானிக்-1 கப்பல் பயணித்த அதே பாதையில் தனது பயணத்தை 2022-ம் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.டைட்டானிக்-2 கப்பலை ப்ளூ ஸ்டார் லைன் நிறுவனம் தயாரித்து வருகிறது. சீனாவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் இந்த கப்பல் 2022-ம் ஆண்டு அங்கிருந்து புறப்பட்டு சவுத்தாம்டன் நகரம் வந்து அங்கிருந்து நியூயார்க் புறப்பட உள்ளது.
டைட்டானிக்-1 கப்பலில் இல்லாத பாதுகாப்பு அம்சங்கள், நவீன தொழில்நுட்பங்கள் இந்தக் கப்பலில் இருக்கும் என அதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.மேலும் டைட்டானிக்-1 கப்பலில் இருந்த அதே தோற்றம், உள்ளரங்கு வடிவமைப்பு, அறைகள், ஓவியங்கள் அனைத்தும் அதே தோற்றத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.
முதலாவது டைட்டானிக் கப்பலில் பயணிக்கும் போன்ற அதே அனுபவம் டைட்டானிக்-2வில் நிச்சயம் இருக்கும்.ஆனால் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள்,தற்காலத்திற்கு ஏற்றாற்போல் அதிகமாக இருக்கும் என அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.