பெரும் போரில் இருந்து தப்பி வாழும் அமேசானின் கடைசி ஆதிவாசி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 10, 2018 03:42 PM
This tribal is the last one living in the amazon forest

அமேசான் காடுகளில் இருந்து அரிய  வகை மூலிகைகள் எடுத்து பிழைப்பு நடத்தும் பல வகையான கார்ப்பரேட் நிறுவனங்கள் பாதி காட்டை அழித்துவிட்டதாக மலைவாழ்மக்களும், பழங்குடி இனத்தவர்களும் குற்றம் சாட்டவே செய்கின்றனர். 

 

ஆனால் வளர்ச்சி என்கிற பெயரில் பெருகிவரும் நகரமயமாதல் காரணமாக இந்த ஆதிவாசி, பழங்குடி இன மக்கள் காலிசெய்யச் சொல்லியும் அவர்களுக்கு நவீன வாழ்க்கையை கட்டமைத்துத் தருவதாக சொல்லியும் எத்தனையோ முறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் 1980ம் ஆண்டுகளில் இங்கிருந்த ஆதிவாசிகள் மீது தொடுக்கப்பட்ட போரினால் பல்வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்தனர்.

 

இருப்பினும் இயற்கையில் இருந்து மரபறுந்து வாழ்வதை விரும்பாமல், விடாப்பிடியாக 6 பழங்குடி மக்கள் மட்டும் அந்த காட்டிலேயே வசித்ததால், அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பின் ஒரே ஒரு  ஆதிவாசி மட்டும் தனித்து வாழ்ந்து கொண்டு வந்திருக்கிறார். அவரை பல நாட்கள் காத்திருந்து  படம் பிடித்த சில அதிகாரிகள், ஒரு வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளனர். மேலும் அமேசன் காடுகளில் வாழ்ந்த ஆதிவாசி மரபின் கடைசி ஆள் அவரே என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #AMAZON #TRIBAL