வாக்காளர்களுக்கு செருப்பும்; கடிதமும் கொடுத்து வாக்கு சேகரித்த விநோத வேட்பாளர்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Nov 22, 2018 10:18 AM
மக்கள் சக்திதான் மக்களாட்சியை பிடிக்க நினைக்கும் சுயேச்சை வேட்பாளர்களுக்கான ஒரே ஆயுதம். அதற்கு முதல் வழி அவர்களுக்கு வேட்பாளர்கள் தங்கள் மீது உருவாக்க வேண்டிய நம்பிக்கைதான். அந்த நம்பிக்கை விதையை ஆழமாக ஊன்றினாலே அவர்களின் இதயத்தில் சென்றமரலாம்.
தெலுங்கானாவில் அடுத்த மாதம் 7ம் தேதி நிகழவுள்ள சட்டமன்ற தேர்தலில், தற்போதைய ஆளுங்கட்சியாக உள்ள தெலுங்கானாவின் ராஷ்டிர சமிதியும் மற்றும் ஐ.எம்.ஐ ஆகியவை ஒரு அணியிலும் இன்ன பிற கட்சிகள் எதிர் அணியிலும் நிற்கின்றன. இடையிடையே சுயேச்சை வேட்பாளர்களும் முயற்சி செய்து பார்க்கின்றனர்.
இந்நிலையில் ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள கொரட்டாலா சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக ஆக்குல ஹனுமந்துலு என்பவர் போட்டியிடுகிறார்.
இதனையொட்டி அவர் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது, வாக்காளர்களிடம் சென்று ஓட்டு கேட்கும் நிம்த்தமாக ஒரு பெட்டி நிறைய செருப்புகள், ராஜினாமா கடித நகல்களை கொண்டுவந்து ஒவ்வொரு வாக்காளரிடமும் கொடுத்து வாக்கு சேகரித்தார்.
இதற்கு, ‘ஒருவேளை தேர்தலில் தான் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகியும் மக்களுக்கு சேவை செய்யவில்லை என்றால், ஓட்டு போட்ட முறையில் மக்கள் தன்னை அடித்து சேவை செய்ய வைக்கலாம்’ என்றும் ‘மேலும் தன் மீதும் தன் செயல்கள் மீதும் நம்பிக்கையின்மை ஏற்பட்டால், இப்போதே தான் கொடுக்கும் ராஜினாமா கடிதத்தை பயன்படுத்தி தன்னை பதவியில் இருந்து விலக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம்’ என்றும் அர்த்தப்படுகிறது என்கிறார்.
இவ்வாறு வாக்காளர்களிடம் செருப்பை கொடுத்து வாக்கு சேகரித்த இந்த சுயேச்சை வேட்பாளர்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார்.