ஐபிஎல் வேண்டாம் என சொல்வதன் பின்னணி என்ன? - திருமுருகன் காந்தி பதில்!
Home > News Shots > தமிழ்By Satheesh | Apr 05, 2018 10:30 AM
தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட்டம் நடந்து வரும் சூழலில், நேற்று பிஹைண்ட்வுட்ஸ் பத்திரிக்கையாளருக்கு பிரத்யேக பேட்டியளித்த திருமுருகன் காந்தி, மத்திய அரசு மீது கடும் விமர்சனங்களை வைத்தார்.
அப்போது, "மத்திய அரசுக்கு தமிழன் என்பதற்கும், தமிழன் உரிமை என்பதற்கும் அர்த்தம் தெரியவில்லை. எந்த அர்த்தமும் தெரியாத முட்டாள் அரசு தான் டெல்லியில் உட்கார்ந்திருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடுதல் கால அவகாசம் கேட்பதற்கு பின்னணியில், பாஜக கர்நாடக மாநிலத்தில் வெற்றி பெறுவது மட்டுமல்ல. தமிழின விரோதம் என்பது பாஜக ரத்தத்தில் உள்ளது. அது ஆர்.எஸ்.எஸ் மூலமாக வந்தது.
இப்போது தமிழ்நாட்டில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற கூடாது என கோரிக்கை வைப்பது, இது எப்போதுமே நடைபெற கூடாது என்பதல்ல, இப்போது தமிழ்நாட்டில் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு ஆதரவாக எல்லோரும் வர வேண்டும் என்பதற்காகத்தான்", என காட்டமான விமர்சனங்களை வைத்தார்.