‘ஹலோ போலீஸா.. ப்ளீஸ் என்ன காப்பாத்துங்க’..திருடச் சென்ற இடத்தில் உதவிக்கு அழைத்த திருடன்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Jan 05, 2019 05:59 PM
பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதுபோல் அவன் திருடன் என தெரிந்தும் அவன் அகப்படும் நேரத்தை காத்திருந்து போலீஸார் பொறி வைத்து பிடிப்பதும் உண்டு. அப்படித்தான் ஒரு திருடன் விநோதமாக, திருடச் சென்ற இடத்தில் உண்டான நெருக்கடியில் இருந்து தன்னை காப்பாற்றக் கோரி போலீஸையே உதவிக்கு அழைத்துள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.
நார்வேயின் ட்ரோந்தலக் பகுதியில், 17 வயதான இளைஞர் ஒருவர் டீலர்ஷிப்பில் இருந்த, கார் ஒன்றை திருடச் சென்றபோது, அந்த காரில் இருந்து ஏதோ காரணத்தால் வெளிவரமுடியாத நிலையில் சிக்கிக்கொண்டுள்ளார். அவர் அந்த நேரத்தில் யாரை வேண்டுமானாலும் உதவிக்கு அழைத்திருக்கலாம். ஆனால் அவர் தன்னை காப்பாற்றுவதற்காக காத்திருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டு போலீஸாரையே உதவிக்கு அழைத்துள்ளதாக காவல்துறையினர் விளையாட்டாக குறிப்பிட்டுள்ளனர்.
ஆம், காருக்குள் மாட்டிக்கொண்ட அந்த இளைஞர் போலீஸுக்கு காலை 8 மணி அளவில் போன் செய்து தான் இவ்வாறு காருக்குள் மாட்டிக்கொண்டதையும், அதனால் தன்னை காப்பாற்றும்படியும் கோரியுள்ளார். அவர் நம்பிக்கையை வீணடிக்காத போலீஸும் அவர் சின்னச்சின்ன திருட்டுக்களை செய்துகொண்டு வந்த மைனர் குற்றவாளி என்பதால் அவரை காப்பாற்றி அறிவுரை கூறி, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.