‘அவர்களும் மனிதர்கள்தான்.. காவலர்கள் ஏன் தூங்கினார்கள்?’:டி.ஐ.ஜி விளக்கம்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Oct 16, 2018 06:25 PM
பீகாரின் பாட்னா நகரில் துர்கா பூஜை, பாதுகாப்பு ஏற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் தூங்கிய விவகாரம் பெரும் விவாதமாக மாறியது.
இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதில் அளித்த மத்திய பாட்னா டிஐஜி, ‘ஒரு இரவு முழுவதும் பணியில் இருந்த காவலர்கள், அடுத்த நாள் துர்கா பூஜை குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க நேர்ந்ததால் தூங்க நேரமின்றி அப்படியே வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நீண்ட ஆலோசனைக் கூட்டத்தில் தன்னை மீறிய இடையிடையே 2-3 நிமிடங்கள் தாக்கு பிடிக்க முடியாமல் தூங்கினர், அது அவர்களின் தவறல்ல என்று விளக்கம் அளித்துள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களும் மனிதர்கள்தான் என்றும் கூறியுள்ளார்.
Tags : #SLEEPINGCOP #BIHAR #DURGAPOOJA #PATNA #POLICEMEN