தேனி காட்டுத் தீயில் சிக்கி பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த குழுவின் பயணத்தை திட்டமிட்டதாகக் கூறப்படும், சென்னை ட்ரெக்கிங் கிளப் தனது முகநூல் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது.
அதில், ”மலையேற்றத்தில் 7 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அருண், விபின் ஆகியோரையும் சேர்த்து 27 பேர் கொண்ட அணி, ஒரு உள்ளூர் வழிகாட்டியுடன் குரங்கணி வனப்பகுதிக்குள் சென்றனர்.
வனத்துறைக்கு கட்டணம் செலுத்தி அனுமதிச்சீட்டு பெற்றுவிட்டு, அவர்கள் மலைப்பகுதிக்கு சென்றபோது காட்டுத் தீ ஏற்பட்டதற்கான அறிகுறி எதுவும் இல்லை.
குரங்கணி மலை அடிவாரத்தில், பருவகால சாகுபடிக்காக புற்களை விவசாயிகள் எரிப்பதால் காட்டுத் தீ ஏற்பட்டிருக்கலாம். போடி பள்ளத்தாக்கில் வழக்கத்தை விட காற்று அதிகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BY SATHEESH | MAR 13, 2018 5:52 PM #THENIFIREACCIDENT #THENIFORESTFIRE #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories