நேற்று தேனி குரங்கணி மலைக்கு மலையேற்றம் சென்றபோது காட்டுத் தீயில் சிக்கியவர்களில், 27 பேர் பல்வேறு விதமான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், குரங்கணி மலைப்பகுதியில் இருந்து தற்போது ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விசாரணையில், மீட்கப்பட்ட நபர் கோயம்புத்தூர் கிணத்துக் கடவு பகுதியைச் சேர்ந்த விபின்(30) எனத் தெரியவந்துள்ளது.
தற்போது, சடலமாக மீட்கப்பட்ட விபினுடைய உடல் போடி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
BY SATHEESH | MAR 12, 2018 10:07 AM #THENIFIREACCIDENT #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories