ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு: தூத்துக்குடி ஆட்சியர்
Home > News Shots > தமிழ்By Manjula | May 25, 2018 11:14 AM
ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 13 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. துப்பாக்கி சூட்டினைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையினை மூடிடக்கோரியும் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையினை மூடிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதனால் தூத்துக்குடியில் அமைதி திரும்பிட பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில், வணிகர்கள், அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்ற அமைதிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப்பின் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக முதல்வர் ஏற்கெனவே தெரிவித்தபடி, ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதில் ஆலைக்கு எதிராகவே அரசு வாதிட்டு வருகிறது. ஆலையைத் திறப்பதற்கு இனி வாய்ப்பில்லை. இதை மக்கள் புரிந்துகொண்டு அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Anna University postpones exams between May 25 and 28
- PM Modi accepts Kohli’s challenge, Singhvi throws another
- 'சொந்த மக்களையே சுட்டுக்கொன்ற உங்களின் பாவத்தை'.. விவேக் ஜெயராமன் கண்டனம்!
- Protesters hold rally to lay siege to Secretariat
- "Saddened by the unfortunate turn of events at Thoothukudi": Vedanta Chairman
- “We are ready if they want to shoot us”: MK Stalin
- Thoothukudi police firing: Madras HC rejects TN govt’s plea to return dead bodies
- தம்பி காளியப்பனின் 'மரணம்' என்னை நிலைகுலைய வைத்துள்ளது: தனுஷ் உருக்கம்
- BIG news: EPS explains why police opened fire in Thoothukudi
- துப்பாக்கிச்சூட்டிற்கு காரணம் இதுதான்: தமிழக முதல்வர்