
'தளபதி' விஜய்யின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'மெர்சல்'. மருத்துவத்துறையின் ஊழல்களை எடுத்துக்கூறிய இப்படத்தில், விஜய் 3 வித்தியாசமான வேடங்களில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
குறிப்பாக ஏ.ஆர். ரகுமான் இசையில் பின்னணிப்பாடகர்கள் கைலாஷ் கேர், சத்யபிரகாஷ், தீபக், பூஜா இணைந்து பாடியிருந்த 'ஆளப்போறான் தமிழன்' பாடல் அனைத்து ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது.
இந்த நிலையில், யூ டியூபில் இப்பாடல் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரை சுமார் 4 கோடி பேர் இப்பாடலை யூடியூபில் பார்த்து ரசித்துள்ளனர். தமிழ் சினிமாவில் 4 கோடி பேருக்கும் அதிகமாக யூ டியூபில் பார்த்து ரசித்த முதல் பாடல், 'ஆளப்போறான் தமிழன்' என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே...
BY MANJULA | FEB 13, 2018 1:16 PM #VIJAY #MERSAL #விஜய் #மெர்சல் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories