‘விமானத்தில் இருக்கும் நான் தீவிரவாதி’: செல்ஃபி எடுத்து பரபரப்பு வாக்குமூலம் கொடுத்த இளைஞர்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Nov 26, 2018 01:54 PM
மும்பையில் இருந்து கொல்கத்தா செல்லக்கூடிய ஜெட் ஏர்வேஸ் விமான எண் 9W-472-ல் பயணித்த 21 வயது இளைஞன் மிடுக்காக செய்த விளையாட்டு காரியம் வினையாகிப் போனது. மும்பையில் இருந்து கொல்கத்தாவின் பகுஹூவாத்திக்கு செல்லும் நிமித்தமாக காலை 7.30 மணிக்கு விமானத்தில் ஏறிய இளைஞன், தன் முகத்தை கர்ச்சீஃப் கட்டிக்கொண்டு புகைப்படம் எடுத்து தன்னுடைய 6 நண்பர்களுக்கு வலைதளத்தில் அனுப்பியுள்ளார்.
கூடவே, ‘விமானத்தில் தீவிரவாதி.. பெண்களின் மனதை நான் காலி செய்துவிட்டேன்’ என்று தலைப்பும் இட்டு அனுப்பியுள்ளார். இதனை, அந்த இளைஞனின் அருகில் இருந்த நபர், கவனித்துவிட்டு உடனடியாக அங்கிருந்த சிஐஎஸ்எஃப் என்கிற மத்திய தொழில் பாதுகாப்பு படைப்பிரிவினருக்கு கூறவும், அவர்கள் உடனடியாக இந்த சந்தேகத்துக்குரிய இளைஞனை பிடித்து பரிசோதனை செய்து விசாரித்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
முன்னதாக மும்பையில் 2008ம் ஆண்டு குண்டுவெடிப்பும் அதைத் தொடர்ந்து பலவிதமான அச்சுறுத்தல்களும் நிகழ்ந்தேறிய சம்பவத்தின் 10வது நினைவலைகளில் இருந்த மும்பை இப்போது இப்படி ஒரு தகவலை அறிந்ததும் அலெர்ட்டாக இருந்துள்ளது. ஆனால் விளையாட்டுத் தனமான இதுபோன்ற இளைஞர்களின் காரியத்தால் இப்படியான டென்ஷன்கள் மும்பை பாதுகாப்பு பிரிவினருக்கு நிகழ்வது இது முதல் முறை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.