தமிழ்நாட்டில் வழக்கமான கோடைக்காலங்களில் இருப்பதைவிட இந்த ஆண்டு வெப்பநிலை அரை டிகிரியில் இருந்து ஒரு டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக பாலிமர் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி மாதத்தின் வானிலையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் முதல் மே வரையிலான கோடைக்காலத்தின் வெப்பநிலையை கணித்துள்ள வானிலை ஆய்வு மையம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
மேலும் வட மாநிலங்களில் வரும் கோடைக்காலத்தில் வெப்பநிலை வழக்கத்தை விட ஒன்றரை டிகிரி செல்சியஸ் அதிகமாகவும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற தென் மாநிலங்களில் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது.
BY SATHEESH | MAR 1, 2018 3:53 PM #TAMILNADU #CLIMATE #CHENNAI #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories