தெலுங்கானா மாநிலம், மண்சேரியல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவன் இரண்டு கைகளும் இல்லாததால், தனது காலினால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆறாவது வகுப்பு பயிலும்போது ஏற்பட்ட மின்சார விபத்தில் தன் இரண்டு கைகளையும் இழந்த எல்லூரி சங்கர், தனது காலினால் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவருகிறார்.
இது குறித்து, சங்கர் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் பேசியபோது, மின்சார விபத்திற்குப் பின் கால்களால் எழுத பழகிக்கொண்ட சங்கர், தன் சார்பாக தேர்வு எழுத தனி எழுத்தருக்கு வேண்டுகோள் விடுக்கவில்லை என்றார்.
BY SATHEESH | MAR 17, 2018 9:44 PM #TELANGANA #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories