ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவிகள் தேர்வுக்காக பேருந்தில் பயணித்த போது, எதிர்பாராதவிதமாக அப்பேருந்து பழுதாகி நின்றுவிட்டது.
பேருந்தில் பயணித்த மாணவிகளில் பெரும்பாலோனோர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களைப் பிடித்து பள்ளிக்கு சென்றுவிட்டனர். ஆனால், 8 மாணவிகள் மட்டும் வாகனம் கிடைக்காமல் சாலையில் பரிதவித்தபடி நின்றனர்.
அப்போது அந்த வழியாகச் சென்ற தெலுங்கானா இன்ஸ்பெக்டர் சீனிவாசலு, மாணவிகளின் நிலையைப் பார்த்து தனது ரோந்து வாகனத்தில் அவர்களைப் பள்ளிக்கு அழைத்துச்சென்றார்.
எனினும், மாணவிகள் செல்வதற்குள் தேர்வு தொடங்கிவிட்டது. ஆனால் சீனிவாசலு பேருந்து பழுதான விஷயத்தை எடுத்துக்கூறி மாணவிகளைத் தேர்வு எழுத அனுமதிக்குமாறு வேண்டினார். இதைத் தொடர்ந்து, மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
BY MANJULA | MAR 2, 2018 4:51 PM #POLICE #TELANGANA #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories