மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நரசிங்பூர் என்ற இடத்தில், பெட்ரோல் பங்கிற்கு வந்த பெட்ரோல் டேங்கர் லாரி, சப்ளை செய்து கொண்டிருந்தபோது தீ பிடித்து எரிந்துள்ளது.
லாரியை ஓட்டி வந்த டிரைவர் சஜித், பெட்ரோல் டேங்கர் லாரியில் தீ பற்றி எரிவதைக் கண்டதும் துரிதமாக செயல்பட்டு, லாரியை ஓட்டிக்கொண்டு யாரும் இல்லாத இடத்தில் கொண்டு போய் நிறுத்தியுள்ளார்.
இதனால் பெட்ரோல் பங்கில் ஏற்பட்டிருக்க வேண்டிய பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், தைரியமாக செயல்பட்ட சஜித்திற்கு உடலில் சிறிய தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
BY SATHEESH | MAR 26, 2018 5:09 PM #FIREACCIDENT #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories