'ரூ.10 லட்சம் நிவாரணம்;குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை'...தமிழக அரசு அறிவிப்பு!
Home > News Shots > தமிழ்By Manjula | May 22, 2018 09:36 PM
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற போராட்டத்தில், போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு பொதுமக்கள் 11 பேர் பலியாகினர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது.
இந்திய அளவில் பெரும் அதிர்வை உண்டாக்கியுள்ள இச்சம்பவத்திற்கு ராகுல், ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதிக்கு ஏற்றவாறு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும், சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும், எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.