பெரியார் சிலை விவகாரத்தில் எச்.ராஜாவுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இது தொடர்பாக, இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட திருப்பத்தூர் ஒன்றிய பொதுச்செயலாளர் முத்துராமன் அவர்களை கட்சியின் அடிப்படை பதவியிலிருந்து நீக்கியுள்ளேன்.
பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் எந்த விதத்திலும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்று மாநிலத்தில் இருந்து ஒரு செய்தியாகவே நான் அனுப்பியுள்ளேன்.
எல்லாம் மன்னிப்பு கேட்ட பின்பும், தமிழகத்தை வேண்டுமென்றே ஒரு போராட்ட களமாக மற்ற காட்சிகள் எடுத்துச் செல்ல கூடாது", எனத் தெரிவித்துள்ளார்.
BY SATHEESH | MAR 7, 2018 12:37 PM #TAMILISAISOUNDARARAJAN #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories