வாகன சோதனையின்போது நிற்காமல் சென்றதால் உஷா - ராஜா தம்பதியினரின் இருசக்கர வாகனத்தை விரட்டிச்சென்று போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் உதைத்ததில், கீழே விழுந்த உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மூன்று மாத கர்ப்பிணியான உஷாவின் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, உயிரிழந்த உஷா குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ரூபாய் ஏழு லட்சம் இழப்பீடு நிதியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
BY SATHEESH | MAR 8, 2018 6:08 PM #TRICHYWOMANDEATH #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories