கலைஞர் (எ) கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது?

Home > News Shots > தமிழ்

By |
Talks going about Bharat Ratna award for Kalaignar Karunanithi

திமுக தலைவர் மு.கருணாநிதி அண்மையில் காலமானார். தமிழ்நாட்டில் 5 முறை முதல்வராக இருந்தவரும், 13 முறை சட்டமன்றத் தேர்தலில் நின்று அத்தனை முறையும் வெற்றி பெற்றவரான அவர் கலைஞர் என்று அறியப்படுகிறார். காரணம் கலைஞர் என்கிற பெயருக்குத் தகுந்தாற்போல், திரைக் காவியங்களை எழுதியவர்.


திரைக்கலைஞர்களை பல்வேறு சமயங்களில் கௌரவப்படுத்தியவர். தமிழ் மொழியை செம்மொழியாக்கும் முயற்சியை முன்னெடுத்தவர் என பல்வேறு கட்ட சமூக வளர்ச்சிகளில் அவரது பங்கு இன்றியமையாதது என்று மாநிலங்களவையில் கலைஞரைப் பற்றிய உரையை வெங்கய்ய நாயுடு முன்னதாக உரையாற்றியிருந்தார்.


அதே போல் மாநிலங்களவையில் தற்போது பேசியுள்ள திமுக எம்.பியான திருச்சி சிவா, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு முதல்வராகவும், எழுத்துப்பணி ஆற்றிய கலைஞராகவும் புகழைத் தேடித்தந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.


மாநிலங்களவையில் இந்த கோரிக்கையை முன்வைத்த திமுக எம்.பி. திருச்சி சிவாவுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கருணாநிதியின் சமகாலத்தில் அரசியலில் இருந்த, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் பாரத ரத்னா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #MKARUNANIDHI #MGR #BHARATRATNA