'சுசிகணேசன் திட்டுகிறார்'..அவரது மனைவி சிரிக்கிறார்: அமலாபால்

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 24, 2018 06:44 PM
Susi Ganesan called and abusing me says Amala Paul

இயக்குநர் சுசி கணேசனால் நானும் பல சங்கடங்களை சந்தித்து இருக்கிறேன் என, லீனா மணிமேகலைக்கு ஆதரவாக நடிகை அமலாபால் அறிக்கை வெளியிட்டார். தற்போது சமூக வலைதளங்களில் இது பரபரப்பான விவாதப்பொருளாக மாறியுள்ளது.

 

இந்தநிலையில் சுசி கணேசன் போன் செய்து என்னைத் திட்டுகிறார், பின்னிருந்து அவரது மனைவி சிரிக்கிறார் என மீண்டும் அமலாபால் ட்வீட் செய்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,'' என் வாழ்க்கையில் அதிர்ச்சியான விஷயம் தற்போது நடந்துள்ளது. சற்றுமுன் இயக்குநர் சுசி கணேசனும்,அவரது மனைவி மஞ்சரியும் எனக்கு போன் செய்தார்கள். எனது தரப்பை விளக்கிட நானும் அவர்களின் போனை அட்டெண்ட் செய்தேன்.

 

அவரது மனைவியிடம் நான் பேசிக்கொண்டிருக்கும் போதே போனைப் பிடிங்கி சுசி கணேசன் என்னை மோசமாகத் திட்ட தொடங்கினார்.பின்னால் இருந்து அவரின் மனைவி சிரிக்கும் சத்தம் கேட்டது. பின்னர் இருவரும் எனனைத் தரக்குறைவாகத் திட்ட ஆரம்பித்தனர். என்னைப் பயமுறுத்த நினைக்கிறார்கள்,'' என பதிவிட்டுள்ளார்.

Tags : ##METOO #SUSIGANESAN #AMALAPAUL