'தடை...அதை உடை'... 'இனிமேல் நீங்க கிரிக்கெட் விளையாடலாம்'...பிரபல இந்திய வீரருக்கு அனுமதி!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Mar 15, 2019 11:52 AM
கிரிக்கெட் விளையாடுவதற்கு பிரபல இந்திய பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டினை அடுத்து,இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு வாழ்நாள் தடை விதிக்கப்படுவதாக பிசிசிஐ அதிரடியாக அறிவித்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீசாந்,எனக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக கூறி நீதிமன்றத்தை நாடினார்.அதனை விசாரித்த தனி நீதிபதி, ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பிசிசிஐ கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.அதனை விசாரித்த உயர்நீதிமன்றம்,தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து,ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடை தொடரும் என உத்தரவிட்டது.இதைத்தொடர்ந்து ஸ்ரீசாந்த் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் வேகபந்துவீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்வது குறித்து பிசிசிஐ முடிவெடுக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் 37வயதான ஸ்ரீசாந்த் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்பது கேள்வி குறியாக இருக்கிறது.அவரின் உடல் எடை அதிகரித்து பயிற்சியிலும் ஈடுபடாமல் இருப்பதால்,ஸ்ரீசாந்த் மீண்டும் ஆடுவாரா என்பது மிகப்பெரிய சந்தேகமே.