
பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் 'காலா' படத்தின் வெளியீட்டுத் தேதியை, அவரின் மருமகனும்-நடிகருமான தனுஷ் சற்றுமுன் அறிவித்துள்ளார். அதன்படி வருகின்ற ஏப்ரல் 27-ம் தேதி 'காலா' உலகமெங்கும் வெளியாகிறது.
அதில் "இந்தத் தேதியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். டான்களுக்கெல்லாம் டான் சூப்பர் ஸ்டார் ரஜினி மீண்டும் வந்துவிட்டார்" என, தனது மகிழ்ச்சியை தனுஷ் வெளிப்படுத்தியுள்ளார்.
கருப்பு நிற உடையில் ரஜினி கால்மேல் கால்போட்டு ஸ்டைலாக கண்ணாடி அணிந்து அமர்ந்திருக்க, அருகில் ஒரு நாய் நின்று கொண்டிருப்பது போல வடிவமைக்கப்பட்டு உள்ள 'காலா' போஸ்டர் ரஜினி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
நெருப்புடா...
OTHER NEWS SHOTS


Read More News Stories