தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், பந்தைச் சேதப்படுத்திய புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர், ஆகியோருக்கு விளையாட ஓராண்டு தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் தலைவர் சதர்லேண்ட் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளதால், அணியின் பயிற்சியாளர் டேரன் லீ மேன் தன் பதவியை ராஜினாமா செய்யவுள்ளாரா, என சந்தேகம் வலுத்துள்ளது.
ஓராண்டு தடை விதிக்கப்படுவது உறுதியானால், ஸ்மித் மற்றும் வார்னர் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாட முடியாத சூழல் உருவாகும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் ஸ்பான்சர்களும் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
BY SATHEESH | MAR 27, 2018 11:43 AM #AUSTRALIAN-BALL-TAMPERING-CONTROVERSY-2018 #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories