தொடர் பதற்றம்: தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 'இன்டர்நெட்' சேவை முடக்கம்
Home > News Shots > தமிழ்By Manjula | May 23, 2018 06:14 PM
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து இன்றும் போலீஸ்-பொதுமக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் அண்ணாநகர் 6வது தெருவில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. ரோந்து சென்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது.பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் வீடு ஒன்று தீக்கிரையானது.
மீண்டும் ஆங்காங்கே பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் அண்ணாநகரில் தொடர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இதனால் தூத்துக்குடி, நெல்லை,கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதாக தமிழக உள்துறை அறிவித்துள்ளது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Ready to send forces if TN asks: Centre over Sterlite Protest
- மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழர்களை நசுக்க முடியாது: ராகுல் காந்தி
- Thoothukudi: Police open fire again, one dead, 5 injured
- Sterlite factory in Thoothukudi was first rejected to be opened in Maharashtra - Details here
- "I strongly condemn the brutal actions of the police": Rajinikanth
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sterlite Protest: Internet service cut off in 3 districts | தமிழ் News.