படேல் சிலையின் கீழ் எழுதப்பட்டிருக்கும் தமிழ் வாசகம் தவறா?: வைரல் போட்டோ!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Oct 31, 2018 05:30 PM
சுதந்திரப் போராட்ட வீரர் சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்த நாளை ஒட்டி, குஜராத்தில் 182 மீட்டர் உயரம் கொண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்ட இந்த சிலைதான் உலகிலேயே மிக உயரமான சிலை என்று சொல்லப்படுகிறது. எனினும் இந்த சிலையின் கீழ் எழுதப்பட்டுள்ள குறிப்புகளில் தமிழ் வார்த்தைகளால் எழுதப்பட்ட வார்த்தைகளினால் தவறான பொருள் வருமாறு அச்சிடப்பட்டுள்ளதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வார்த்தைகள், ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என்று தவறுதலான அர்த்தத்துடன் வந்திருப்பதாக அந்த புகைப்படம் காட்டுகிறது. உண்மையில் வல்லபாய் படேலின் சிலைக்கு கீழ் பதிவு செய்யப்படும் எழுத்துக்களாக இவை இருப்பின், ‘ஒற்றுமையே தேசத்தின் பலம்’ அல்லது ‘ஸ்டேட் ஆஃப் யூனிட்டி’ என்று வரவேண்டிய சொல் இப்படி வந்திருக்கலாம் என பலர் கருதுவதோடு, இணையத்தில் வைரலாகும் இந்த படத்தை பலர் விமர்சிக்கவும் செய்கின்றனர்.