கொல்கத்தாவில் நடைபெற்று வரும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய, இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பரான ரித்திமான் சாகா, 20 பந்துகளுக்கு சதமடித்து அசத்தியுள்ளார்.
முதல் இன்னிங்சில் பேட் செய்த பி.என்.ஆர் அணி, 152 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. தொடர்ந்து ஆடிய மொஹூன் பாகன் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சாகா, தொடக்கம் முதலே அதிரடி காட்டத் தொடங்கினார்.
சந்தித்த முதல் 12 பந்துகளில் 50 ரன்களை கடந்த சாகா, மொத்தமாக 20 பந்துகளில் 102 ரன்களை அடித்துள்ளார். இதில் 14 சிக்சர்களும் 4 பவுண்டரிகளும் அடங்கும்.
BY SATHEESH | MAR 24, 2018 9:52 PM #CRICKET #WRIDDHIMANSAHA #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories