கர்நாடகாவில் 'காலா' வெளியாக 'ஸ்டாலின்' நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
Home > News Shots > தமிழ்By Manjula | Jun 02, 2018 02:12 PM
ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' திரைப்படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய மக்கள் விரும்பவில்லை,அவர்களின் விருப்பத்துக்கு மாறாக நடக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இதனால்,கர்நாடக மாநிலத்தில் 'காலா' திரைப்படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில்,கர்நாடகாவில் 'காலா' படம் வெளியாக ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு இன்று அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், "எஸ்.வி.சேகர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்.காவிரி விவகாரத்தில் திமுகவும்,காங்கிரஸ் கட்சியும் அதன் கடமையில் இருந்து தவறக்கூடாது.
கர்நாடகாவில் ரஜினியின் 'காலா' படம் வெளியாக முதல்வர் குமாரசாமியிடம் ஸ்டாலின் பேச வேண்டும்.தமிழுக்காக எதையும் செய்யாத திமுக ஒரு தமிழ் படம் வெளியாவதற்காவது நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என தெரிவித்துள்ளார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Rajinikanth to offer solatium to Thoothukudi shooting victims
- People will be happy as ‘cinema artist’ visits them: Rajini on his Thoothukudi visit
- Stalin calls upon Tamizhaga Vazhvurimai Katchi founder T Velmurugan
- DMK not to attend Assembly session until CM Palaniswami resigns: Stalin
- TN Assembly convenes, DMK MLAs arrive in black