மிளகாய்ப்பொடி..நாற்காலி...'சபாநாயகரை எம்பிகள் படுத்தியப்பாடு':வைரலாகும் வீடியோ!
Home > News Shots > தமிழ்By Jeno | Nov 17, 2018 01:08 PM
இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றாவது நாளாக ஏற்பட்ட அமளியின் காரணமாக,சபாநாயகர் மீது எம்பிகள் மிளகாய் பொடி வீசியது கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியது. ஆனால் இந்த இந்த நம்பிக்கை ஓட்டெடுப்பை ஏற்க முடியாது என அதிபர் சிறிசேனா மறுத்து விட்டார். இதனால் கடும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.இந்நிலையில் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை மதியம் இலங்கை நாடாளுமன்றம் கூடிய போது, சபாநாயகர் கரு ஜெயசூரியா வரலாறு காணாத அளவில் நூற்றுக்கணக்கான போலீசாரின் பாதுகாப்புடன் வந்தார்.
அப்போது ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆதரவு எம்.பி.க்களுக்கு இடையே கடும் வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது. அப்போது சபாநாயகர் மீது ராஜபக்சே எம்.பிக்கள் மிளகாய் பொடியை தூக்கி வீசினர். இந்த கூச்சல் குழப்பத்திற்கு நடுவே ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இதில் தீர்மானம் வெற்றி பெற்றதாகவும், நாடாளுமன்றம் மீண்டும் 19-ஆம் தேதி கூடும் என்றும் சபாநாயகர் அறிவித்தார்.
ராஜபக்சே எம்.பிக்களின் இந்த செயலால் நாடாளுமன்றம் போர்க்களம் போல் காட்சியளித்தது.