
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தனது அறிமுக படமான 'தடக்'கிற்காக கடந்த சில மாதங்களாக ஸ்கூட்டி ஓட்டக் கற்று வந்தார் என சொல்லப்படுகிறது.
மேலும், நன்றாக ஸ்கூட்டி ஓட்டிப் பழகியவுடன், தனது அம்மா ஸ்ரீதேவியை ஸ்கூட்டியின் பின்னால் அமரவைத்து ஜாலியாக ஊரைச் சுற்றியும் காட்டியுள்ளார்.
ஸ்ரீதேவி உறவினர் திருமணத்துக்காக துபாய் செல்வதற்கு சில நாட்கள் முன்னர்தான், ஜான்வி-ஸ்ரீதேவிக்கு ஸ்கூட்டி ஓட்டிக் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
துரதிர்ஷ்டவசமாக, மகள் ஜான்வியுடன் ஸ்ரீதேவியின் கடைசிப்பயணமாகவும் இது அமைந்து விட்டது.
'தடக்' பட வேலைகள் காரணமாக, ஜான்வி அம்மா ஸ்ரீதேவியுடன் துபாய் திருமணத்திற்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
BY MANJULA | FEB 28, 2018 3:01 PM #SRIDEVI #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories