
மாரடைப்பில் காலமான ஸ்ரீதேவி இறப்பதற்கு முன்பான கடைசி நிமிடங்கள் குறித்த தகவல்களை துபாய் ஊடகம் வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியாவில் இருந்த போனி கபூர், தன் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் துபாய் சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் ஸ்ரீ தேவி தங்கியிருந்த விடுதி அறைக்கு சென்ற போனி கபூர், தூங்கி கொண்டிருந்த ஸ்ரீதேவியை எழுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். தொடர்ந்து இருவரும் 15 நிமிடங்கள் பேசிவிட்டு, இரவு விருந்து செல்வதற்காக ஸ்ரீ தேவி குளிக்க சென்றுள்ளார்.
ஸ்ரீ தேவிக்காக குளியலறைக்கு வெளியே காத்திருந்த போனி கபூர் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால், கதவை உடைத்து உள்ளே சென்றபோது ஸ்ரீதேவி நீர் நிரம்பிய தண்ணீர் தொட்டியில் மயக்க நிலையில் கிடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
BY SATHEESH | FEB 26, 2018 9:30 AM #ACTRESS #DEATH #SRIDEVI #LAST MINUTES #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories