'அவர் எந்த தப்பும் செய்யல'...உருக்கமான கடிதம் எழுதியிருக்கும் 'பிரபல கிரிக்கெட்' வீரரின் மனைவி!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 29, 2018 10:42 AM
Sreesanth\'s Wife Writes In Open Letter To BCCI

என் கணவர் எந்த தவறும் செய்யவில்லை,அவர் நிரபராதி என ஸ்ரீஷாந்தின் மனைவி புவனேஷ்வரி,பிசிசிஐக்கு உருக்கமான‌ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி பந்துவீச்சாளராக திகழ்ந்தவர் ஸ்ரீஷாந்த்.இவர் 2013-ம் ஆண்டு நடைபெற்ற,ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுக்கு ஆளாகி தடை பெற்றார்.தற்போது ஸ்ரீஷாந்த் ஹிந்தி பிக்பாஸின் 12வது சீசனில் பங்கேற்று வருகிறார்.அந்த ஷோவில் தனது சக போட்டியாளர்களிடம் மேட்ச் பிக்சிங் புகார் பற்றி பேசிக் கொண்டிருந்துள்ளார். அதில் 10 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு பேட்ச் பிக்ஸிங் செய்தேன் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் நான் அப்படி செய்யவில்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

 

இந்நிலையில் ஸ்ரீஷாந்தின் மனைவி புவனேஷ்வரி,பிசிசிஐக்கு உருக்கமான‌ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் "முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரும் எனது கணவருமான ஸ்ரீஷாந் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடவில்லை. அவர் மீது தவறான புகார் கூறப்பட்டுள்ளது. அதற்கு அவர் மீது வாழ்நாள் தடை விதித்திருப்பது முறையற்றது என்று தெரிவித்துள்ளார்.

 

35 வயதான ஸ்ரீஷாந்துக்கு டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின் படி, பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #BCCI #MATCHFIXING #SREESANTH #BHUVNESHWARI