கஜா புயல் காரணமாக 4 விரைவு ரயில்கள் உட்பட 16 ரயில்களின் சேவை ரத்து!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 15, 2018 10:44 AM
Southern Railway - 16 Trains Cancelled Due to Cyclone Gaja

கஜா புயல் இன்று இரவு சுமார் 11.30 மணி அளவில் பாம்பன்- கடலூர் இடையே கரையை கடக்கும் புயல் கரையை கடக்கும்போது சென்னைக்கு பாதிப்பு இருக்காது. மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

இந்நிலையில் கஜா புயல் காரணமாக 4 விரைவு ரயில்கள் உட்பட 9 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. காரைக்கால்- சென்னை, மன்னார்குடி-சென்னை , வேளாங்கண்ணி-சென்னை, விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

இதேபோல், தஞ்சை-சென்னை உழவன் விரைவு ரயில், திருச்சி- தஞ்சை சிறப்பு கட்டண ரயிகள் ரத்து செய்யப்பட்டது. வேளாங்கண்ணி-காரைக்கால் பயணிகள் ரயில், காரைக்கால்-தஞ்சை பயணிகள் ரயில், விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவற்றை இல்லாமல் கஜா புயல் காரணமாக 7 ரயில்கள் பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags : #GAJACYCLONE #HEAVYRAIN #RAIN #SOUTHERNRAILWAY