கோவாவில் நாங்களே 'தனிப்பெரும் கட்சி'...ஆட்சி அமைக்க அழையுங்கள்!
Home > News Shots > தமிழ்By Manjula | May 17, 2018 05:32 PM

கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சி என்று கூறி பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது போல, கோவாவில் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்காக, அம்மாநில காங்கிரஸ் தலைவர் செல்லகுமார் மற்ற கட்சி தலைவர்களுடன் நாளை அம்மாநில கவர்னரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை கவர்னர் ஆட்சியமைக்க அழைக்காவிட்டால், எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னர் மாளிகையில் தர்ணா நடத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாம்.
40 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட கோவா சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 17, பாஜக 13, மற்ற கட்சிகள் 10 இடங்களிலும் வென்றது. எனினும், சிறிய கட்சிகள் ஆதரவுடன் பாஜக கோவாவில் ஆட்சியமைத்தது. இதேபோல மேகாலயாவிலும் காங்கிரஸ் தனிக்கட்சியாகத் திகழ்ந்தபோது மற்ற கட்சிகளுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- BS Yeddyurappa to take oath as Chief Minister tomorrow
- Karnataka: Congress, JD(S) threaten to stage dharna in front of Raj Bhavan
- பெயரை அழைத்தால் 'ஜெய்ஹிந்த்' சொல்ல வேண்டும்.. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உத்தரவு!
- Another ‘Koovathur’ in Karnataka, Congress MLAs taken to resort
- 'எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க முயன்றால்'.. பாஜகவை எச்சரித்த குமாரசாமி!