Looks like you've blocked notifications!
நான் வாங்கி வைத்த மதுவை நீ குடிப்பதா? - பெற்ற தாயை கொன்ற மகன்!

சென்னை டி.பி.சத்திரம், சிமென்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கலாவதி. கணவரை இழந்த இவர், தன்னுடைய மூன்றாவது மகன் நீலகண்டனுடன் வசித்து வருகிறார்.

 

இந்நிலையில், நீலகண்டனுக்கும் அவருடைய தாய் கலாவதிக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவ தினத்தன்று நீலகண்டன் தான் குடிப்பதற்கு வாங்கி வைத்திருந்த  மது பாட்டிலை எடுத்து கலாவதி குடித்துள்ளார்.

 

வீட்டிற்கு வந்தபோது தன் மதுபான பாட்டில் காலியாகி இருப்பதைக் கண்ட நீலகண்டன், கோபத்தில் கலாவதியை பிடித்து கழிவறையை நோக்கி தள்ளியுள்ளார்.

 

இதில், போதையில் இருந்த கலாவதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், நீலகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

BY SATHEESH | MAR 27, 2018 2:43 PM #MURDER #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People