முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ஸ்நாப்சாட்டை இனி தான் பயன்படுத்தப் போவதில்லை என, அமெரிக்க பிரபலம் கெய்லி ஜென்னர் டுவிட்டரில் தெரிவித்தார்.
கெய்லியின் இந்த சிங்கிள் டுவீட்டால், நேற்றைய (வியாழக்கிழமை) அமெரிக்க பங்குச்சந்தையில், ஸ்நாப்சாட் நிறுவனத்தின் பங்குகள் 6.1% என்றளவில் கடுமையாக சரிந்தன. இதன்மூலம், சுமார் 1.3 பில்லியன் டாலர் (8,436கோடி) அளவிலான சந்தை மூலதனத்தையும் ஸ்நாப்சாட் நிறுவனம் இழந்துள்ளது.
சமீபத்தில் ஸ்நாப்சாட் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய மாற்றங்கள் பிடிக்காமல் தான், கெய்லி ஜென்னர் இப்படி செய்தார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கெய்லி ஜென்னரை ஸ்நாப்சாட்டில் சுமார், 2.45 கோடி பேர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
sooo does anyone else not open Snapchat anymore? Or is it just me... ugh this is so sad.
— Kylie Jenner (@KylieJenner) February 21, 2018
BY MANJULA | FEB 23, 2018 1:59 PM #SNAPCHAT #KYLIEJENNER #ஸ்நாப்சாட் #கெய்லிஜென்னர் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS