
சிக்னல் பிரச்சினை ஒரு வாரத்தில் சரிசெய்யப்படும் என, ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் சங்கர நாராயணன் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "டவர் ஏஜென்சிகளுக்கு வாடகை நிலுவை காரணமாக சிக்னல் தடைபட்டுள்ளதாகவும், தமிழகத்தில் ஏர்செல்லுக்காக செயல்பட்டு வந்த 9 ஆயிரம் டவர்களில் 6 ஆயிரத்து 500 டவர்களில் சிக்னல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், டவர் வைத்திருக்கும் தனியார் ஏஜென்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும், ஒரு வாரத்துக்குள் பிரச்சினையை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
ஒன்றரைக் கோடியாக இருந்த ஏர்செல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, தற்போது ஒன்றேகால் கோடியாகக் குறைந்துவிட்டதாகவும் சங்கர நாராயணன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
BY MANJULA | FEB 22, 2018 12:58 PM #AIRCEL #TAMILNADU #ஏர்செல் #தமிழ்நாடு #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories