
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரபிரதேச மாநிலத்தில் தொடங்கிய, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் ராமராஜ்ஜிய ரத யாத்திரை, இன்று திருநெல்வேலி வழியாக தமிழகம் வந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்ற சீமானை, போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
BY SATHEESH | MAR 20, 2018 11:31 AM #SEEMAN #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories