ரவிச்சந்திரன் அஸ்வினை பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமித்ததற்கான காரணத்தை அந்த அணியின் ஆலோசகர் சேவாக் தற்போது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், இயல்பாகவே பௌலர்களால் சிறந்த கேப்டனாக விளங்க முடியும் என்றும், வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ், கபில் தேவ் போன்ற சிறந்த கேப்டன்கள் இதற்கு உதாரணம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அஸ்வின் ஒரு புத்திசாலி என்றும், விரைவாக பந்துவீச்சாளர்களை மாற்றும் திறனுடையவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அஸ்வின் பவர்பிளே ஓவர்களில் அதிகமாக பந்து வீசியுள்ளதால், 20 ஓவர் போட்டியை மற்ற எல்லோரை விடவும் நன்றாக புரிந்துகொள்ள முடியும் என்ற காரணத்தால் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.
BY SATHEESH | FEB 27, 2018 9:48 PM #VIRENDHARSHEWAG #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories