ஆண்களின் திருமண வயதை 18-ஆக குறைக்கக் கோரிய மனு: உச்சநீதிமன்றம் அதிரடி!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Oct 22, 2018 12:12 PM
ஆண்களின் திருமண வயதுக்கென உச்ச வரம்பாக 21 வயதும் பெண்களின் திருமண வயதாக 18 வயது உச்ச வரம்பும் முன்னதாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சுதந்திர இந்தியாவுக்கு கொஞ்ச முந்தைய காலக்கட்டத்தில் இருந்த அதிக குழந்தைத் திருமணங்களை சீர்படுத்தும் நோக்கில் உருவானதாக இந்த சட்டம் வயதுவந்தோருக்கான திருமண வயதின் உச்ச வரம்பாக இருந்து வந்தது.
பலர் தத்தம் உறவினர்களை எதிர்த்து காதல் திருமணங்களைச் செய்யவும் இந்த வயது வரம்பு அனுமதித்தது. ஆனால் ஆண்களின் திருமண வயதுக்கான உச்சகட்ட வயது வரம்பாக 18 வயதே இருக்க வேண்டுமென்கிற வழக்கறிஞர் அஷோக் பாண்டேவின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் இந்த கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
Tags : #SUPREMECOURT #MARRIAGEABLE AGE