'ஸ்பைடர்மேனை' நேரில் பார்த்தேன்: விராட் கோலி புகழாரம்
Home > News Shots > தமிழ்By Manjula | May 18, 2018 05:29 PM
நேற்று நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றிபெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்துக்கு பெங்களூர் அணி முன்னேறியுள்ளது.
இதில் ஹைதராபாத் அணிக்கு எதிரான 8-வது ஓவரை பெங்களூர் அணியின் மொய்தீன் அலி வீசினார். கடைசி பந்தை எதிர்கொண்ட ஹால்ஸ் இறங்கி வந்து தூக்கியடித்தார். சிக்சாக மாறும் என அனைவரும் எதிர்பார்த்திருக்க எல்லைக்கோட்டுக்கு அருகில் நின்றிருந்த டிவிலியர்ஸ், 'ஸ்பைடர்மேன்' போல பறந்து அந்த பந்தைப் பிடித்தார்.
டிவிலியர்ஸின் இந்த அற்புதமான கேட்சால் 2 முறை அவுட் ஆகும் கண்டத்திலிருந்து தப்பிய ஹால்ஸ், 37 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இந்த நிலையில் வெற்றிக்குப்பின் பெங்களூர் அணி கேப்டன் கூறுகையில், "ஹைதராபாத் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக டிவில்லியர்ஸ், மொய்ன் அலி, கிராண்ட் ஹோம் ஆகியோரின் பேட்டிங் அபாரமாக இருந்தது.
எல்லை கோட்டில் டிவில்லியர்ஸ் பாய்ந்து கேட்ச் பிடித்தது ‘ஸ்பைடர்மேன்’ போல் இருந்தது. இதை நீங்கள் சாதாரண மனிதனாக இருந்தால் செய்ய முடியாது. அவரது பீல்டிங் நம்ப முடியாத வகையில் இருந்தது.அவரது ஷாட்டுகள் இன்னமும் எனது பிரமிப்பில் இருந்து செல்லவில்லை.
மொயின் அலி தனது பணியை நன்றாக செய்தார். அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை இரு கைகளிலும் நன்றாக பிடித்து கொண்டுள்ளார்.எங்களது சொந்த மைதானமான பெங்களூரில் இது கடைசி ஆட்டம். ரசிகர்களின் ஆதரவு அற்புதமாக இருந்தது,'' என்றார்.
நடப்பு ஐபிஎல் போட்டிகளில் சிறந்த 'பவுலிங் யூனிட்' என புகழப்படும் ஹைதராபாத் அணிக்கு எதிராக, 218 ரன்களை நேற்று பெங்களூர் அணி குவித்தது குறிப்பிடத்தக்கது.
Spiderman, Superman, AB-MAN https://t.co/LX3y1s1LjF #RCBVSSRH #ViratKohli #RCB #IPL
— Cricket Fan (@mazhil1111) May 18, 2018
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- மும்பைvsபஞ்சாப்: போட்டிக்குப்பின் அணிமாறிய வீரர்கள்... வீடியோ உள்ளே!
- ராயல்ஸ் அணியின் விக்கெட்டுகளை வீழ்த்த... 'ராஜஸ்தான் ஆலோசகர்' தான் காரணம்!
- பட்லர்-ஸ்டோக்ஸ் 'திடீர்' விலகல்... சிக்கலில் ரஹானேவின் 'ராஜஸ்தான்' ராயல்ஸ்!
- வெறித்தனம்: 6 பந்துகளையும் 'பவுண்டரிக்கு' அனுப்பிய பட்லர்
- 'பாகுபலி' அம்பாதி ராயுடுவைப் பாராட்டி 'பாடல்' வெளியிட்ட பிரபலம்!
- மும்பை இந்தியன்ஸ் அணியை 'வீட்டுக்கு' அனுப்புவோம்: அஸ்வின் நம்பிக்கை
- 'அவர்கள் பேட்டிங்கைக் கண்டு பயப்படுவோம் என நினைத்தனர்'.. யாரைச் சொல்கிறார் கோலி?
- KXIP vs RCB: KXIP thrashed by Kohli-Patel combo
- KXIP vs RCB: A disappointing start for the KXIP
- This legend labels Sanju Samson as the 'next superstar of Indian cricket'