ஒரு கோடி ரூபாய் பென்ஸ் கார் பரிசு...ஊழியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய வைர வியாபாரி!
Home > News Shots > தமிழ்By Jeno | Sep 29, 2018 01:17 PM
கடந்த 25 ஆண்டுகளாக தனது நிறுவனத்தில் விசுவாசமாக வேலை பார்த்த 3 ஊழியர்களுக்கு தலா ரூ.ஒரு கோடி மதிப்பில் 3 பென்ஸ் கார்களை பரிசாக அளித்து குஜராத் வைர வியாபாரி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்தில் ஹரே கிருஷ்ணா என்னும் ஏற்றுமதி நிறுவனத்தை சவ்ஜி தோலாகியா நடத்தி வருகிறார். அவரது நிறுவனத்தில் தற்போது 5,500 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.இந்நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களான 40 வயதுடைய நிலேஷ் ஜடா, 43 வயதான மகேஷ் சந்திரபாரா, 38 வயதான முகேஷ் சந்திரபாரா ஆகிய 3 பேரும் சவ்ஜி தனது நிறுவனத்தை ஆரம்பிக்கும் போது சிறுவர்களாக பணியில் சேர்ந்தவர்கள்.
அவர்கள் பணியில் சேர்ந்ததிலிருந்து விசுவாசமாகவும் நேர்மையுடனும் பணியில் நடந்துகொண்டதோடு வேறு எந்த நிறுவனத்திற்கும் செல்லாமல் 25 வருடங்களாக அவரது நிறுவனத்திலேயே தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.அவர்களின் கடுமையான உழைப்பிற்கும் விசுவாசத்திற்கும் தகுந்த பரிசாக ரூ.1 கோடி மதிப்புள்ள பென்ஸ் ஜிஎல்எஸ் 350டி எஸ்யுவி காரை சவ்ஜி தோலாகியா பரிசாக அளித்துள்ளார்.
அந்தக் காரின் சாவிகளை சூரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச கவர்னர் மற்றும் முன்னாள் குஜராத் முதலமைச்சர் ஆனந்தீபன் படேல் முன்னிலையில் ஊழியர்களுக்குக் கொடுத்து கெளரவித்தனர்.