பெண்களுக்கு குரல் கொடுத்த கனடாவுடன்.. உறவை துண்டித்துக்கொண்ட சவுதி அரேபியா!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Aug 06, 2018 12:33 PM
கனடா பாரம்பரியங்களையும் நவீனத்தையும் இரு கண்களாக பராமரிக்கும் நாடு. அங்கு வாழும் ஒவ்வொரு நாட்டவரும் ஒவ்வொரும் மொழியினத்தவரும் மதிக்கப்படுவதை தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் காணமுடியும். அண்மையில் தமிழ்நாட்டு வாழ்த்துப் பாடல் கனடாவில் ஒலிக்கப்பட்டதும், தமிழ்த் திருவிழா ஒன்றில் கனடா பிரதமர் கலந்துகொண்டு நடனமாடியதும் பிரபலமானது. அந்த அளவிற்கு தனிமனித உரிமைகளையும் உணர்வுகளையும் மதிக்கும் நாடாக கனடா திகழ்கிறது.
இதேபோல் சவுதி அரேபியா நாடுகள் தனக்கென ஒரு பாரம்பரியத்தையும், தீவிர இறையாண்மையினால் வழுவாத நெறியை கடைபிடிப்பதில் கறார்த்தன்மையுடனும் இருந்து வருகின்றன. எனப்படும் இந்த நாடுகளில் வசிக்கும் பெண்கள் அந்நாட்டு விதிகளுக்கு கட்டுப்பட்டு வாழவில்லை எனில் கடும் தண்டனைகளுக்கு ஆளாவார்கள் என்பதும் உலகறிந்த விஷயம். இந்நிலையில் அண்மையில் இசுலாமிய பெண்கள் சேர்ந்து ஃபர்தா அணிவதற்கும் இதர சுதந்திரங்களுக்கும் எதிரான கோஷங்களை இட்டு பேரணி, போராட்டங்களை நடத்தினர்.
இதற்கு சவுதி அரேபியா செவிசாய்க்காத நிலையில், அரபு நாடுகளின் இந்த போக்கை கனட அரசு தரப்பு விமர்சித்திருந்தது. இதன் காரணமாக, கோபமான சவுதி அரேபிய நாடுகள் கனடாவின் உறவை தார்மீகமாக முறித்துக்கொள்வதாக தங்களது அலுவல் ரீதியான ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து, கனடாவில் இருக்கும் சவுதி அரேபிய வெளியுறவுத் தூதரையும் தனது நாட்டிற்கே திருப்பி அழைத்துக்கொண்டுள்ளது.
இரண்டு நாடுகளுக்கிடையில் நிகழ்ந்துள்ள இந்த பனிப்போரினால் உண்டாகும் விளைவுகள் குறித்து இன்னும் இருநாடுகளும் ஆலோசிக்கவோ, முடிவெடுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.